முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு
![]() |
இப்னு அறபி நாயகம் |
இன்று 21.03.2012 ஷேகுல் அக்பர் "முஹ்யித்தீன் இப்னு அறபி" (றழி) அவர்களின் நினைவு தினம்
ஸுபித்துவ இறைஞானத்தின் தந்தையெனப் போற்றப்படும் இவர்கள் ஸ்பெயினின் மூர்ஸியா எனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை (கி.பி.1165 ஜூலை 29) அன்று பிறந்தார்கள். இவர்களின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும்.
ஸுபித்துவ இறைஞானத்தின் தந்தையெனப் போற்றப்படும் இவர்கள் ஸ்பெயினின் மூர்ஸியா எனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை (கி.பி.1165 ஜூலை 29) அன்று பிறந்தார்கள். இவர்களின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும்.
இவர்களின் பெற்றோருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாத குறையை ஈராக்கின் பக்தாத் நகர் சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துரைத்தபோது, அவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 5 மாதங்களுக்குப் பின் பிறந்தார்கள். ஸ்பெயினில் இவர்கள் பெயர் அப்னு சுராக்கா. அரபகத்தில் இப்னு அரபி என்றே அழைக்கப்பட்டார்கள்.
தம் தந்தையிடமும், செவில்லியில் வாழ்ந்த அபூபக்கர் இப்னு கலாப் அவர்களிடமும், இப்னு முஅல்லிஃப், அபுல்ஹஸன் ஷரீஹ், அபுல்காசிம் ஷர்ரத் என்பவர்களிடமும் மார்க்க கல்வி பயின்றனர். மேலும் யூத, கிறத்துவ, ஜெராஸ்டிய மதம் பற்றிய நூல்கள், கிரேக்க தத்துவ ஞானம், கணிதம் பற்றிய நூல்களையும் பயின்றார்கள்.
மகான் ஷேகுல் அக்பர் பற்றி சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் ஆற்றிய உரை
One Click Download
( To download the Bayan "Right Click" the opening webpage and select "Save as")
பூமான் நபீயின் மகத்துவம்.
ரஸூலுல் அக்ரம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவம் குறித்து எங்களின் கண்ணியத்துக்குரிய ஷெய்குநாயகம் அப்துல் காதிர் ஸூபி ஹலரத் (றஹ்) அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு
குவலயம் போற்றும் குத்பு நாயகம்
இந்த அடிப்படையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் 27வது வருட மாகா கந்தூரி எதிர்வரும் 04.03.2012 ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டுஅதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் குத்துப்பிய்யஹ்வின் சிறப்பு குறித்து ஆற்றிய சிறப்புரையினை இங்கு பதிவிடுகின்றோம்.
கவிதை
குவலயம் போற்றும் குத்பு நாயகம்
--------------------------------------------------
கவிஞர் எம்.ஏ.சீ. றபாய்தீன்
---------------------------------------------------
வலிமார் திலகமே!
வள்ளல் நபிகளின் வாரிசே!
நுபுவத்தெனும் நபித்துவத்தின் முத்து-
நம் நாயகமென்றால்
விலாயதெனும் வலித்தனத்தின் வித்து நீங்களல்லவா!!
இதனால்தான் இறைவன்
தீனுல் இஸ்லாத்தை
உயிர்ப்பிக்க உங்களை
தீன்தாரியாக முஹ்யித்தீனாக
இந்த அகிலத்திற்கு
அனுப்பி வைத்தான்!
றபீஉனில் அவ்வல் மாத சிறப்பு பயான்.
இஸ்லாத்தின் வசந்த காலமான றபீஉனில் அவ்வல் மாதத்தில் எங்களின் உயிரினும் மேலான உத்தம நபீயின் அவதாரத்தினால் அகிலமே அருட் பிளம்பானது. அன்னாரின் சிறப்புக்களையும் புகழையும் இந்நாளில் விசேடமாக எடுத்தோதுவது எங்களின் மீது கடமையாக உள்ளது.
"அல்லாஹ்வுடைய சிறப்பைக் கொண்டும் மேலும் அவனது றஹ்மத்தைக் கொண்டும் அவர்கள் சந்தோசமடையட்டும். (அவர்கள் அப்படி சந்தோசமடைவது) அவர்கள் சேமித்து வைத்திருப்பவைகளை விட மிகவும் சிறந்தது."
-அல்குர்ஆன்-
1981ம் ஆண்டு ஜனவரி திங்கள் 21ம் நாள் அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் ஞானபிதா அல்ஹாஜ் மௌலவீ அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அதாலல்லாஹு பகாஅஹூ. அவர்கள் ஆற்றிய நபீகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ் தொடர்பான ஆன்மீக விளக்கவுரை.
குறிப்பு:
இங்கே : சிறப்பு என்பது புனித திரு குர்ஆன் என்றும், றஹ்மத் என்பது கொண்டு நாடப்படுவது நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றும் தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அத்துர்றுல் மன்தூர் என்ற குர்ஆன் விளக்கவுரையில் கூறுகின்றார்கள்.
கர்பலா ஒரு வரலாற்றுப் பார்வை.
- இமாம் ஹுசைன் (றழி) அவர்களின் புனித மௌலீத் ஷரீப்
- பழனி பாபா அவர்களின் குரலில் கர்பலா
- செந்நீர் வடிக்கும் கல்
கர்பலா ஒரு வரலாற்றுப் பார்வை
இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆஷுரா நாளில் இரண்டு நோன்புகளை தந்தது. வேறு என்ன தந்தது? வேறு என்ன? இந்த சமூதாயத்திற்கு தலை குனிவை தான் தந்தது! காரணம் என்ன?
இந்த சமூதாயத்தில் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதோ, யாரை நேசிப்பது ஈமான் என்று கூறப்பட்டதோ, யாருக்காக தொழுகையில் சலவாத் ஓதப்படுகின்றதோ, யார் சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் சொல்லப்பட்டதோ,
சொற்களால் பேசும் கவிஞர்கள்! பைசான் மதீனா
பைசான் மதீனா
கிடைபதற்கரிய நான்கு இஸ்லாமிய கீதங்கள்.
![]() |
கலைமாமணி நாகூர் சலீம் |
உலகில் பிறந்த அனைவரும் ஒவ்வொறு விசேட திறமையுடனேயே படைக்கப்பட்டுள்ளனர். அதனை கண்டறிந்து எல்லோரும் பயன் படுத்திக் கொள்வதில்லை. அவ்வாறு பயன் படுத்திக் கொள்பவர்கள் அதன் மூலம் தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை செய்பவர்கள். நன்றிக்குறிவர்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.
ஈழத்து ஹஸ்ஸான் மௌலவீ இப்றாஹிம் நத்வீ |
இப்படிப்பட்ட தலைசிறந்த கவிஞர்களின் இஸ்லாமிய இறைஞானத்தை உலகிற்கு தனது எளிய சொற்களால் கோர்த்து பாடலாக மெருகேற்றி பாமரர்களை சிந்திக்கச் செய்தவர்களை எந்த வார்த்தைகளால் புகழ முடியும்?
வாழ்க்கை என்ற வண்டியை இழுப்பதற்கே நேரம் குறைவாக உள்ள காலத்தில் நல்ல விடயங்களை கேட்கப் பார்க்க மனிதர்களுக்கு நேரம் இல்லை. போகும் வழியில் காதில் வாங்கிக்கொள்ளப் படுபவையே அவர்களின் சிந்தனைக் கருவாகி விடுகின்றது. அதுவும் இசையுடன் இனிமையாக இருந்தால் சொல்லவும் வேண்டுமா!
பாடல்களை கேட்க உள்ளே செல்லுங்கள்
ஹஜ்ஜுப் பெருநாளின் தத்துவங்கள்!

ஹஜ்ஜுப் பெருநாளின் தத்துவங்கள் பற்றி அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குனா அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய சிறப்புரை.
Download the Bayan
ஆலங்களின் அகமியம்
பஞ்ச வர்ணங்களாகி
பற்பல விதங்கொண்ட விந்துநாதத்துட்
பதிந்துமுளை பருவமாகி
வேரோடி யோக பூமிக்குள் வளர்ந்தருள்
விளைந்தொழுதுகு தருவுமாகி
விண்ணாகி, மண்ணாகி, யெண்ணாகி. வெகுவாகி
விரிவாகி மறைவுமாகி
தூராதி தூரத்தி னுந்தூர மாகியதி
சூழ்ச்சிச் சமீப மாகித்
தோற்றுமொளி புரியவடி யேனுமுமை நம்பினேன்
துரிதமுட னாளுதற்கே
வாராரு மருண்மாரி யுள்ள நீர் பின்றொடர
வள்ளலிற சூல்வருகவே வளருமரு ணிறைகுணங்
குடிவாழு மென்னிருகண்
மணியே முஹ்யித்தீனே.
--------குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்கள்------------
ஆலங்களின் அகமியம் எனும் தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி,பஹ்ஜீ அவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய உரை..
கல்பின் கறை நீக்கும் நோன்பு
அதி சங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குத் தர்பிய்யஹ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக ஆற்றிய உரையினை இங்கு தருகின்றோம்.
பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்
இஸ்லாத்தின் எழுச்சிக்கு வித்திட்ட புனித பத்ரு யுத்தம் நடை பெற்ற தினமான ரமழான் 17 ம் தினத்தை முன்னிட்டு சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறூக் (பலாஹி) காதிரி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினத்தன்று இலங்கை காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஆற்றிய உரையை இவ்வருட பத்ரு ஸஹாபாக்கள் நினைவு விசேட உரையாக தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்
![]() |
Marhoom. Molavi Farook (Falahi) Khathiri with Ash Shiekh Moulavee Abdur Rauff (Misbahee, Bahji) |
திருக்கலிமா தருகின்ற உண்மையான பொருள் என்ன?

""லாயிலாஹ இல்லல்லாஹ்" தருகின்ற ஏகத்துவ ஞானத்தை அறியாதவர் முகம்மதுர்றசூலுல்லாஹ் என்ற தத்துவத்தை அறிய மாட்டார். இரண்டையும் அறியாதவர் "விசுவாசியாகவும் முடியாது.
முகம்மதுர்றஸூல்லாஹ் என்பது இரத்தினக்கல்லாயும் அவ்விரத்தினக்கல் விளைந்த பூமி அல்லாஹ்வின் தாத் வுஜூதாயுமிருக்கிறது என்பதை அறியாதவரையும் மேலும், அந்த பூமிக்கும் அதில் விளைந்த இரத்தினக்கல்லுக்குமுள்ள குர்பிய்யத் நெருக்கம் தொடர்பு எவ்வாறு என்பதை விளங்காதவரையும் முகம்மத் (ஸல்) என்ற இரத்தினக்கல்லின் தகுதியை உணரவே முடியாது.
முகம்மதுர்றஸூல்லாஹ் என்பது இரத்தினக்கல்லாயும் அவ்விரத்தினக்கல் விளைந்த பூமி அல்லாஹ்வின் தாத் வுஜூதாயுமிருக்கிறது என்பதை அறியாதவரையும் மேலும், அந்த பூமிக்கும் அதில் விளைந்த இரத்தினக்கல்லுக்குமுள்ள குர்பிய்யத் நெருக்கம் தொடர்பு எவ்வாறு என்பதை விளங்காதவரையும் முகம்மத் (ஸல்) என்ற இரத்தினக்கல்லின் தகுதியை உணரவே முடியாது.
-1982 ம் ஆண்டு ஜனவரிமாத ஞானச்சுரக்கத்தின் பேரின்ப அமுத இதழிலிருந்து-
கவனத்திற்கு:
"இதனை டவுன்லோட் செய்துகொள்ள" என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்யவும் அதன்பின் வரும் ஸ்கிரினில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும்
கருணை உஸ்தாதே!
இனிய றமழானை சிறப்பிக்கும் முகமாக கடந்த 19.07.2011 அன்று ஹாஜாஜீ கோடியேற்றத்துடன் வெளியிடப்பட்ட "ஷம்ஸ் அலைகள்" இஸ்லாமிய இசைப் பேழையிலிருந்து ஒரு இனிய பாடலை வாசகர்களுக்காக பிரசுரிக்கின்றோம்.
இப்பாடலை இயற்றியவர் :
ஈழத்து ஹஸ்ஸான், கவித்திலகம் மௌலவி எச்.எம்.எம்.இப்றாஹீம் (நத்வீ)
பாடலைப் பாடியவர் :
பாடகர் - கே.எம். அமானுல்லாஹ் (றூஹுல்லாஹ்)
ஹாஜாஜீ கந்தூரி நினைவுகளில்..
![]() |
மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் |
அன்று 04 வது வருட மகா கந்தூரி மிக விமர்சையாக எமது அவ்லிய்யாக்களின் தளமான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் கரீப் நவாஸ் பொன்டேஷன் ஏற்பாட்டில் நடந்தேரிக்கொண்டிருந்தது.
இறுதி தினமான அன்று மௌலவீ பாஸில் றப்பானி பட்டமளிப்பு விழா நடைபெற்று மூன்று மௌலவீமார்கள் மௌலவீ பாஸில் பட்டம் பெற்றுக் கொண்டனர்
1990 ம் ஆண்டு நாலாம் வருட அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி அவர்களின் மகா கந்தூரியில் சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறுக் காதிரிஅவர்கள் பட்டமளிப்பு விழாவின் பின்னர் பரகத்துக்காக அஜ்மீர் அரசர் அவர்களைப் பற்றி ஒரு சிறிய உரையை ஆற்றி அத்துடன் அஸ்மாஉ ஹாஜா (அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களின் திருநாமங்கள்) ஓதி அம்மஜ்லிசை பெரிய துஆ பிராத்தனையுடன் இனிதே நிறைவு செய்தார்கள்.
சங்கைக்குரிய மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் ஆற்றிய சிறப்புரை இணைக்கப்பட்டுள்ளது
தௌஹீத் வாதிகளின் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்
கடந்த 03.09.2010 அன்று இலங்கையில் தௌஹீத் வாதிகளின் சுவர்கபுரியான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயிலில் முப்பெரும் நாதாக்களின் கந்தூரி தினத்தன்று “கல்பின் கறைகள்” என்ற தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா “காத்தமுல் வலி” அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றிய சிறப்புறை எமது “ஈதுல் அல்ஹா” விசேட பிரசுரமாக பிரசுரிக்கப்படுகின்றது.
பெரிய ஆலிம் அவர்களின் 32வது கந்தூரி
அதி சங்கைக்குரிய வலியுல் காமில் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் (றஹ்) அவர்களின் 32வது கந்தூரி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.09.2010 அன்று இலங் கையில் காத்தான்குடி பத்ரியாஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் மிகவும் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அதி சங்கைக்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயான் நிகழ்த்த உள்ளார்கள். பெரிய ஆலிம் (றஹ்) அவர்கள் குறித்து அவர்களின் அருந்தவப் புதல்வர் அதி சங்கைக்குரிய ஞானபிதா அவர்கள் ஆற்றிய உரை எம்மால் பிரசுரிக்கப்படுகின்றது.
புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பர்கள் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
புனித ஈத் அல் பித்ர் குறித்து அதி சங்கைக்குரிய மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி பக்ஜி அவர்கள் ஆற்றிய சிறப்புரை உங்களுக்காக பிரசுரிக்கப்பட்டுள்ளது
Download Bayan here
Download Bayan here
முப்பெரும் நாதாக்களின் கந்தூரி
இலங்கையில் காத்தான்குடி பத்ரியா ஜூம்மாப் பள்ளிவாயலில் முப்பெரும் அவ்லியாக்களின் கந்தூரி நாளை வெள்ளிக்கிழமை 03.09.2010 புனித ரமழான் 24ம் இரவு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு அவ்லியாக்களின் பெயரில் கத்தமுல் குர்ஆன் நிகழ்ச்சியுடன் கந்தூரியும் நடைபெறவுள்ளது.
1. இந்தியாவின் ஹைதராபாத் மானிலத்தின் சம்சியாபாத்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ள அஷ் ஷேக் அப்துல் காதிர் சூபி ஹைதராபாதி நாயகம்.
2. இந்தியாவின் தமிழ் நாட்டின் காயல் பட்டணத்தில் பிறந்து அங்கேயும் இலங்கையிலும் வாழ்ந்து கொழும்பு குப்பியாவத்தையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அஷ் ஷேக் அப்துர் காதிர் சூபி நாயகம்
ஞானம் மெய்ஞானம்
1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி புஹாரி சரீப் 08ம் இரவு அதி சங்கைக்குரிய சம்சுல் உலமா அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றிய ஞான உபதேசத்தை புனித ரமழான் விசேட உரையாக பிரசுரிக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
டவுன்லோட் செய்ய
பகுதி 2

ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல் , குத்துபுல் ஹிந்த், கரீபே நவாஸ், ஸாஹிபே ஜமால்
24 வது வருட மகா கந்தூரி
இந் நிகழ்வு 28.07.2010 அன்று கோடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்ஷா அல்லாஹ் 01.08.2010ல் மகா கந்தூரியுடன் நிறைவுற இருக்கின்றது.
புனித லைலத்துல் கதிர் இரவு
புனித ரமழான் மாதத்தில் வருகின்ற கண்ணியமிக்க இரவான லைலத்துல் கதிர் இரவு பற்றி அதி சங்கைக்குரிய ஷேகுனா மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் ஆற்றிய சிறப்புரை நாம் எதிர்கொள்ளும் புனித லைத்துல் கதிர் இரவை கௌரவிக்கும் முகமாக பிரசுரிக்கப்படுகின்றது.
இலங்கை வானொலியில் ஆற்றிய சிற்றுரை
அதிசங்கைக்குரிய ஞானபிதா அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் புனித ரமழானை முன்னிட்டு 17.08.2010 மற்றும் 22.08.2010 ஆகிய இரு தினங்களிலும் இலங்கை வானொலியின் தேசிய சேவையில் ஆற்றிய சிறப்புரை
நோன்பின் மாண்பு
எம்மை எதிர்கொள்ளும் புனித நோன்பை வரவேற்கும் முகமாக சம்சுல் உலமா காத்தமுல் கவ்மி அஷ் ஷேக் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் யதார்தமான நோன்பு எனும் தலைப்பில் ஆற்றிய உரையினை பதிவிடுகின்றோம். அல்ஹம்து லில்லாஹ்.
24 வது ஹாஜாஜீ மஹா கந்தூரி - 2010
இலங்கையில் காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளி வாயலில்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியம் நடாத்தும்
ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல் , குத்துபுல் ஹிந்த், கரீபே நவாஸ், ஸாஹிபே ஜமால்
ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும்
ஸாஹிபே ஜாலால், ஸர்தாரே ஸர்வார்
ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும்
24 வது வருட மகா கந்தூரி
இந் நிகழ்வு 28.07.2010 அன்று கோடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்ஷா அல்லாஹ் 01.08.2010ல் மகா கந்தூரியுடன் நிறைவுற இருக்கின்றது.
இந்தக் கந்துாரிக்கு காணிக்கை செலுத்த விரும்புகின்றவர்கள்
GAREEB NAWAZ FOUNDATION,
BJM ROAD, KATTANKUDY 06, SRI LANKA
TELEPHONE: + 94 65 22 45 625
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிறப்பு பயான்
சிறப்பு பயான்
இந்நிகழ்வை முன்னிட்டு அகமியம் இணையத்தளம் ஸம்சுல் உலமா, காத்தமுல் கவ்மி அதி சங்கைக்குரிய மௌலவி அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்களின் இரண்டாவது கந்தூரி தினத்தில் ஆற்றிய உரையை உங்களுக்குத் தருகின்றோம்